search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹோலிகா தகனம்"

    நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகையையொட்டி, ஹோலிகா தகனம் எனும் நிகழ்வு நடைபெறும். இதில் மசூத் அசார், பப்ஜி கேம் ஆகியவற்றின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுகின்றன. #Holi #HolikaDahan
    மும்பை:

    ஹோலி (அரங்கபஞ்சமி) பண்டிகை இந்து மதத்தின் பிரபலமான இளவேனிற்காலப் பண்டிகையாகும். இந்த பண்டிகையானது இந்தியாவின் மும்பை, மேற்கு வங்காளம், வங்கதேசம் ஆகிய பகுதிகளில் தோல்யாத்திரை (தௌல் ஜாத்ரா) அல்லது வசந்த உற்சவம் (வசந்தகாலத் திருவிழா) என அழைக்கப்படுகின்றது. இது பெரும்பாலும் பிரஜ் சமூகத்தினரால் கடவுள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய மதுரா, பிருந்தாவன், நந்தகோன், பர்சனா ஆகிய நகரங்களில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    இதேப் போன்று நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளிலும் சூரிநாம், கயானா, தென்ஆப்பிரிக்கா, திரினிதாத், இங்கிலாந்து, மொரீசியஸ் மற்றும் பிஜி போன்ற இந்து மக்கள் பரவலாக வாழும் நாடுகளிலும் விரிவாகக் கொண்டாடப்படுகின்றது.



    இப்பண்டிகையில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது 'ஹோலிகா தகனம்' ஆகும். இதனை ஹோலிகா எரிப்பு என்றும் கூறுவர்.  இந்துசமயப் புராணங்களின்படி, பிரகலாதனைக் கொல்வதற்காக இரணியகசிபுவின் தூண்டுதலால் ஹோலிகா மேற்கொண்ட முயற்சியில் அவளே எரிந்து மாண்டுபோனாள். இதன் அடையாளமாக ஹோலிகா தகனம், வைக்கோலில் உருவ அமைப்பு வைக்கப்பட்டு, எரித்து கொண்டாடப்படுகிறது.

    மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று நடைபெற உள்ள ஹோலிகா தகனம் நிகழ்வில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அடிமையாக்கி பலரது கவனத்தினை பெரிதும் ஈர்த்த ஆன்லைன் கேமான பப்ஜி ஆகியவற்றின் கொடும்பாவிகள் எரிக்கப்பட உள்ளன. மும்பை ஒர்லி பகுதியில் இந்த கொடும்பாவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. #Holi #HolikaDahan


    ×